வள்ளியூரில் அதிக அளவில் கனிமங்களை வெட்டி எடுத்த சம்பவம்… திமுக எம்.பி.க்கு சொந்தமான 7 லாரிகள் பறிமுதல்

0 9681

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்த சம்பவத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கு சொந்தமான 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வள்ளியூர், ராதாபுரம் போன்ற பகுதிகளில் ஏறத்தாழ 25 க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதாக கூறி பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் வந்தன .இந்நிலையில் நேற்று மாலை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அதிக அளவிலான கனிமங்கள் 9 லாரிகளில் ஏற்றி வரப்பட்டு  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 7 லாரிகள் திமுகவைச் சேர்ந்த நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்திற்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments