இந்திய மக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்... டாக்டர் வி.கே .பால் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

0 1844

ஒமிக்ரான் பாதிப்பு பரவி வரும் நிலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் இரட்டை டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினரும் கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர்க் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே .பால் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழலில் எடுக்கக் கூடிய மிகவும் பயனுள்ள நடவடிக்கை இதுவேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரபணு மாற்று தடுப்பூசியை கூடுதலாக செலுத்தலாம் என்றும் டாக்டர் பால் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பால், தடுப்பூசிகள் தற்போதைய தேவையை மட்டுமின்றி எதிர்காலத்தில் வரப்போகும் பலவகை நோய்கள், வைரஸ்களில் இருந்தும் நமக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments