"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் சரக்கு ஏற்றிக் கொண்டிருந்த தொழிலாளி அப்படியே உறங்கி விட, இறுதியில் அவர் அபுதாபிக்கே சென்று விட்ட வேடிக்கை.!
மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் சரக்கு ஏற்றிக் கொண்டிருந்த தொழிலாளி அப்படியே உறங்கி விட, இறுதியில் அவர் அபுதாபிக்கே சென்று விட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையிலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
அதில் கார்கோ பிரிவில் தொழிலாளி ஒருவர் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர் அயர்ந்து உறங்கி விட, விமானமும் புறப்பட்டு அபுதாபிக்குச் சென்று விட்டது. அங்குள்ள அதிகாரிகள் விமானத்தின் சரக்குப் பெட்டகத்தை திறந்ததும் உள்ளே பேந்த.... பேந்த விழித்தபடி நின்ற தொழிலாளியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் விமான நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தொழிலாளிக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டு மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
Comments