ஹைத்தி நாட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 60க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் எரிவாயு டேங்கர் வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரியை இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, திருப்பியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அதிலிருந்து வெளியேறிய எரிபொருளைப் பிடிக்க ஏராளமானோர் கூடியிருந்த நேரத்தில், அந்த லாரி திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அருகில் இருந்த கட்டடங்கள், வாகனங்கள் என பலவும் எரிந்து நாசமாகின.
இந்த விபத்தில் லாரியில் எரிபொருள் பிடித்துக் கொண்டிருந்த 60 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க ஹைத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments