ஒமைக்ரான் பாதித்தவருக்கு போலி நெக்டிவ் சான்றிதழ்.. பெங்களூருவில் 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை

0 2207
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பாதித்தவருக்கு போலி நெகடிவ் சான்றிதழ் வழங்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பாதித்தவருக்கு போலி நெகடிவ் சான்றிதழ் வழங்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த 20ஆம் தேதி பெங்களூரு வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் தனியார் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது மாதிரிகள் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வரும் முன், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றார்.

இந்நிலையில் பரிசோதனை முடிவில், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் வெளிநாடு செல்ல போலி கொரோனா நெகடிவ் சான்றிதழ் தயார் செய்த கொடுத்தவர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, 4 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, வெளிநாடு தப்பியவர் தங்கிய ஓட்டலின் பணியாளர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments