சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

0 2803
சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குநர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா

சிபிஐ, அமலாக்கத்துறையின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இரு துறை இயக்குனர்கள் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான அவசர சட்டங்களை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது.

இந்நிலையில், நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments