இந்திய வரலாற்றில் முதன் முறையாக அசாம் தேயிலை கிலோ ரூ.99,999 க்கு விற்பனை
இந்திய வரலாற்றில் முதன் முறையாக சிறப்பு ரக தேயிலை ஒன்று கிலோவுக்கு 99 ஆயிரத்து 999 ரூபாய் என ஏலத்தில் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அசாமின் திப்ரூகர் மாவட்டத்தில் இருக்கும் மனோகரி தேயிலை எஸ்டேட்டில் பறிக்கப்பட்ட இந்த தேயிலைக்கு மனோகரி கோல்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைக்கு மருத்துவ குணங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் 2019 ல் இதே ரக தேயிலை கிலோவுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது ஒரு சாதனையாக கருதப்பட்டது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு பிறகு வேறு இரண்டு எஸ்டேட்டுகளில் பறிக்கப்பட்ட கோல்டன் நெடல்ஸ் என்ற தேயிலை ரகம் ஏலத்தில் கிலோவுக்கு 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதே இது வரை சாதனையாக இருந்தது.
Comments