உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி

0 5663
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்பெயினில் நடைபெறும் இத்தொடரில் நடப்பு சாம்பியனான பி.வி.சிந்து, ஸ்லோவேக்கியா-வின் மார்டினா ரெபிஸ்கா-வை 21-7 21-9 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார். 24 நிமிடங்கள் மட்டுமே இந்தப் போட்டி நீடித்தது.

ஆடவருக்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் ஜப்பான் வீரர் கெண்டா நிஷிமோடோ-வை 22-20 15-21 21-18 என்ற செட் கணக்கில் போராடி வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் , சிராக் ஷெட்டி ஜோடி சீனாவின் லீ ஜி ஹுய், யாங் போ ஜோடியை 27-25 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments