பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ப்ரெயின் சென்சிங் மூலம் குணப்படுத்தி வருவதாக அப்போலோ மருத்துவமனை தகவல்
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆழ்மூளை தூண்டுதலில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான 'ப்ரெயின் சென்சிங்' மூலம் குணப்படுத்தி வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவக்குழு, நடுக்கம், இறுக்கம், அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளில் தாமதம் ஆகியவை பார்கின்சன் நோயின் அறிகுறிகள் என தெரிவித்தனர்.
இந்நோய் பாதித்த நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை ஒரேநாளில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த சிகிச்சை நீண்ட காலம் பலனளிப்பதாகவும் மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
Comments