அகதிகளை ஏற்றி வந்த கார் கட்டிடத்தில் மோதி விபத்து ; 7 பேர் உயிரிழப்பு

0 2354
அகதிகளை ஏற்றி வந்த கார் கட்டிடத்தில் மோதி விபத்து

ஹங்கேரியில், அகதிகளை ஏற்றி வந்த கார், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

செர்பியாவில் இருந்து ஹங்கேரிக்கு 10 அகதிகளை காரில் ஏற்றி வந்த நபர், எல்லையில் போலீசார் தடுத்த போது காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீடு ஒன்றின் மீது மோதி கவிழ்ந்தது.

7 அகதிகள் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ஓட்டுநரை கைது செய்த போலீசார் சட்டவிரோதமாக அகதிகளை அழைத்து வந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments