லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதிச் செயல் ; சிறப்பு புலனாய்வு பிரிவு

0 2641
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதிச் செயல்

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என சிறப்பு புலனாய்வு பிரிவு லக்னோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி, போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, ஏற்பட்ட வன்முறையில் மேலும் சில பலியாகினர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அலட்சியத்தால் நிகழ்ந்தது அல்ல என்றும் கைதான 13 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments