மதம் மாறினால் கல்வி-வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு பறிபோகும் : கர்நாடகாவில் விரைவில் வருகிறது மதமாற்ற தடைச்சட்டம்
பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதற்கான சட்டம் கர்நாடகாவில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
தூண்டுதலின் பேரில் நடக்கும் மதமாற்றத்தை தடை செய்வதற்கான சட்டம் கர்நாடக சட்டப்பேரவையில் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் இஸ்லாம் அல்லது கிறித்தவ மதத்திற்கு மாறும் பின்தங்கிய வகுப்பினருக்கு இந்த சலுகைகள் இனி கிடைக்காது.
அவர்கள் மத சிறுபான்மையினராக கருதப்பட்டு அதற்கான ஒதுக்கீட்டின் கீழ் மட்டுமே கொண்டுவரப்படுவார்கள் என சட்டஅமைச்சர் மதுஸ்வாமி தெரிவித்துள்ளார்.
தற்போது கர்நாடகாவில் இந்துக்களாக இருக்கும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியலினத்தவர் வேறு மதங்களுக்கு மாறினாலும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்தாகாத நிலை உள்ளது.
Comments