மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

0 2232
தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு 2ஆயிரத்து750கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு 2ஆயிரத்து750கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் தொடங்கி வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 58ஆயிரத்து 463மகளிர் சுய உதவி குழுக்களில், உறுப்பினராக இருக்கும் 7லட்சத்து 56 ஆயிரத்து 142 பேருக்கு சுமார் 2750 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 200 பயனாளிகளுக்கு 7 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. திட்டத்தை தொடங்கி வைத்ததோடு, மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்கள் கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது திமுக அரசு தான் என்றார். 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது எனவும், பெண்கள் சுயமாக உழைத்து முன்னேறுவதை நோக்கமாக கொண்டு தான் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது எனவும்
முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க திருவள்ளூர் மாவட்டம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர் மலர்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments