அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து

0 5210
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் மாரிதாஸ் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் மாரிதாஸ் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்ததாக யூடியூப்பர் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாரிதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாரிதாஸை ட்விட்டரில் 2 லட்சம் பேர் பின் தொடருவதாகவும், மனுதாரரான மாரிதாஸ் நன்கு அறிந்தே இந்த கருத்தை பதிவு செய்திருப்பார் எனவும் கூறி, அவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments