காஷ்மீரில் போலீசாரின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்.. கோழைத்தனமான தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!
ஜம்மு காஷ்மீரில் போலீசாரின் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித்துள்ளார்.
ஸ்ரீநகர் அருகே போலீசாரின் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2 போலீசார் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக கூறியுள்ளார்.
Comments