வாங்கிய கடனை அடைத்த பின்னரும் நிலத்தின் பத்திரத்தை தராமல் கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்த 5பேருக்கு சேலம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.!

0 3076

வாங்கிய கடனை அடைத்த பின்னரும் நிலத்தின் பத்திரத்தை தராமல் கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்த 5பேருக்கு சேலம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஏற்காட்டை சேர்ந்த அசோக்குமார் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு  கிருஷ்ணமூர்த்தியிடம் தனது நிலத்தின் பத்திரத்தை வைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதனை அடைத்த பின்னரும் கிருஷ்ணமூர்த்தி பத்திரத்தை தராமல் இழுத்தடித்ததால் கோபம் அடைந்த அசோக்குமார் தகராறு செய்துள்ளார். இதில் கோபம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரின் நண்பர்கள் ஏற்காட்டிற்கு வந்து அசோக்குமாரை கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அசோக் குமார் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி உள்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments