காசி விஸ்வநாதர் கோயில் பல ஆண்டுகளாக அழிவைக் கண்டாலும், அது இன்னும் பெருமையுடன் நிற்கிறது - பிரதமர் நரேந்திர மோடி
காசி விஸ்வநாதர் கோயில் பல ஆண்டுகளாக அழிவைக் கண்டாலும், அது இன்னும் பெருமையுடன் நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
காசி விஸ்வநாதர் கோயிலின் வளாக திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, கோயில் வாசல் அமைக்கப்பட்டிருந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, மன்னர் அவுரங்கசீப்பின் செயல்கள் குறித்துப் பேசிய அவர், ஒரு அவுரங்கசீப் படையெடுக்கும் போதெல்லாம், ஒரு சிவாஜி இந்த மண்ணிலிருந்து எழுகிறார் என்று குறிப்பிட்டார்.
கங்கை நதியோரம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி எளிதாகப் பேச முடியும் என்று குறிப்பிட்ட அவர், அந்த பிணைப்பு இந்தியாவின் ஆற்றலை அப்படியே வைத்திருக்கிறது என்றும் மோடி பேசினார்.
Comments