அடுத்த ஆண்டு 500 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க இலக்கு -அமைச்சர் பியூஷ் கோயல்

0 1945

அடுத்த ஆண்டு 500 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சிஐஐ மாநாட்டில் பேசிய அவர், தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும், உலகின் பிற பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கும் இந்தியா பிரகாசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

வாழ பாதுகாப்பான இடமாக உலகை மாற்ற தொடர்ந்து பங்களிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசிகள் மலிவு விலையில் சமமாக கிடைப்பதை உறுதிசெய்ய தேவைப்படும் அளவுக்கு தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments