ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.!

0 3671

108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.

இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சிம்மகதியில் வந்தார்.காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே அடியார் திருக்கூட்டம் புடைசூழ நம்பெருமாள் வெளிவந்து ஆயிரங்கால் மண்டபம் வந்து சேர்ந்தார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளதால் இந்த ஆண்டும் பெருமாள் புறப்பாட்டின் போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் சுவாமி ஆயிரங்கால் மண்டபம் வந்து சேர்ந்த பின் காலை 6.15 மணிக்குப் பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள்நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செயத்னர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments