சட்ட அமைச்சர் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி 5 அதிகாரிகளுக்கு படுகாயம்

0 2985

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சென்ற சட்டத்துறை அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில், 5 பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மதுரை விமானநிலையம் வந்த அமைச்சர் ரகுபதியை அழைத்து வருவதற்காக புதுகோட்டையிலிருந்து கிளம்பிய வாகனம் சிறுகூடல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து நேர்ந்துள்ளது.

ஓட்டுநர் கடும் வேகத்தில் இயக்கி வந்ததால் வாகனம் வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. விபத்து குறித்து கீழசெவல்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments