மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக தலைமைக் காவலர் கைது

0 3752
மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக தலைமைக் காவலர் கைது

திருச்சியில் மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த கருணாநிதி, வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மனநலம் குன்றிய பெண்ணை, எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையம் அருகேயுள்ள பாழடைந்த ரயில்வே பாலத்திற்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்த சிலர் தலைமைக் காவலரை கையும், களவுமாக பிடிக்க முயற்சித்திருக்கிறனர். ஆனால், அவர் பைக்கில் தப்பியோடிவிடவே, பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து நடந்ததை கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments