ஹெலிகாப்டர் விபத்து.. கேள்வி எழுப்பிய சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு பதியப்பட்டதா? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

0 3522

முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி யூடியூபர் மாரிதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் விசாரணையில், பிபின் ராவத் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெறும் சூழலில், வன்முறையைத் தூண்டும் விதமாக மாரிதாஸ் ட்வீட் செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின் போதும் சந்தேகம் எழுப்பப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். இதனை அடுத்து, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments