சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? ; உயர்நீதிமன்ற கிளை கேள்வி

0 2948
சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? ; உயர்நீதிமன்ற கிளை கேள்வி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? என்றும் விசாரணையை முழுவதும் முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை அடுத்து விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கின் நிலை தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி முரளிசங்கர், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments