பொருளாதார நிலை குறித்து, முதலமைச்சருடன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பொருளாதார நிலையை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதையை வகுத்துத் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கப் பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினரான ரகுராம் ராஜன் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்தார்.
அப்போது பொருளாதார நிலையை வலுப்படுத்துவது, நிலுவையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்துவது, அதற்கான நிதி ஆதாரம் ஆகியன தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Comments