ஹெலிகாப்டர் விபத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்பசத்திரம் கிராம மக்களுக்கு ராணுவ மருத்துவமனையில் ஓராண்டுக்கு இலவச சிகிச்சை
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள், ஓராண்டுக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தென் மண்டல ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் அறிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான இடத்தில் ராணுவ அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த அவர், கிராம மக்களுக்கு கைகளை கூப்பி நன்றி தெரிவித்தார். மேலும், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவி பொருட்களையும் அவர் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார்.
முன்னதாக, வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதோடு, சம்பவத்தன்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய்த்துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
Comments