நினைவேந்தலின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு ; ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் கவலைக்கிடம்

0 1972
நினைவேந்தலின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், நினைவேந்தலின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். ஹூஸ்டன் நகரில், 2 வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட நபருக்கு ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற பலூன்களை பறக்கவிடும் சடங்கின் போது எதிர்பாரா விதமாக கூட்டத்துக்குள் கார் ஒன்று புகுந்தது. அதில் இருந்த நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments