ரஸ்க் பாக்கெட் வாங்கிவிட்டு பணம் தர மறுத்த பெண் கடை ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ரஸ்க் பாக்கெட் வாங்கிய பெண், பணம் தர முடியாது எனக்கூறி கடை ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த கடைக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண், கடையின் முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த ரஸ்க் பாக்கெட் ஒன்றை எடுத்து, அங்கிருந்த ஆட்டுக்கு கொடுத்துவிட்டு, பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது கடை ஊழியர்கள் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அப்பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சிறிது நேரத்தில் உறவினர்கள் சிலரை அழைத்து வந்து சண்டையிட்டுள்ளார். மேலும், கடையில் இருந்த பெண் ஊழியரை அப்பெண்ணும், உறவினர்களும் தாக்கினர்.
இச்சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Comments