10ஆம் வகுப்புத் தேர்வில் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு
10ஆம் வகுப்பு தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற கேள்வி நீக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆங்கில தேர்வில், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டன.
அதில், பெண்கள் தங்கள் கணவரின் பேச்சை கேட்க வேண்டும் போன்ற கருத்துக்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வகையிலும் அக்கேள்வி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அக்கேள்வி நீக்கப்படும் என்றும் அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Comments