எரிவாயு குழாய் வெடித்ததால் 4 கட்டிடங்கள் தரைமட்டம் ; 9 மாத கர்ப்பிணி உள்பட 7 பேர் உயிரிழப்பு

0 1939
9 மாத கர்ப்பிணி உள்பட 7 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் எரிவாயு குழாய் வெடித்து, இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து 9 மாத கர்ப்பிணி செவிலியர் உள்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரவனுசா நகரில், பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட கசிவால் சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டது.

அங்கிருந்த 4 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடு குவியல்களில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 30 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. 7 பேரின் உடல்கள் கிடைத்துள்ள நிலையில் இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments