நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி
நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்து உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களின் படங்களுக்கு இரு அவைகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது நிகழ்ந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் 20ஆண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே வைக்கப்பட்ட வீரர்களின் படங்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Comments