2 டோஸ் தடுப்பூசியால் ஒமிக்ரானில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது - போரிஸ் ஜான்சன்

0 3645

ஒமிக்ரான் பரவல் வேகமாக அதிகரிப்பதை அடுத்து பிரிட்டனில் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒமிக்ரான் பேரலை வீசும்  என தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், அதை தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்கனவே போடப்பட்ட 2 டோஸ் தடுப்பூசியால் கிடைக்காது என்று கூறியுள்ளார். ஆனால் மூன்றாவதாக ஒரு பூஸ்டர் டோசை போடுவதன் மூலம் ஒமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பை பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே மக்கள் அனைவருக்கும் மூன்றாவதாக ஒரு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் போட முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.  டிவி நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், பூஸ்டர் டோஸ் போடாவிட்டால், ஒமிக்ரான் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments