தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பெங்களூரில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளிப்பு.!
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைக்கு பெங்களூரில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிப்புக்கு ஆளான பாரதி என்ற 2 வயது குழந்தையின் பெற்றோர் ஜெகதீஷ் - எழிலரசி தம்பதியினர், சிகிச்சைக்கு தேவையான 16 கோடி ரூபாயையும் திரட்டியுள்ளனர். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட நிர்வாகம் சார்பில் 45 லட்சம் ரூபாயை திரட்டி வழங்கினார்.
6 கோடி ரூபாய் வரியை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில், குழந்தைக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையை தொடர்ந்து நான்கு மாதம் வரை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்' என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Comments