சோவியத் ஒன்றியம் பிரிந்தபோது பொருளாதார நெருக்கடியால் கார் ஓட்டினேன் - ரஷ்ய அதிபர் புதின்
சோவியத் ஒன்றியம் பிரிந்தபோது பொருளாதார நெருக்கடியால், வாழ்க்கைத் தேவைக்கான வருமானத்தை ஈட்டத் தான் வாடகைக் கார் ஓட்டியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ரஷ்யா உட்பட 15 நாடுகளாகப் பிரிந்தது. இது குறித்த ஒரு திரைப்படத்தில் பேசியுள்ள புதின், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ரஷ்யாவின் வீழ்ச்சி என்றும், முப்பதாண்டுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு பெரும்பாலான குடிமக்களுக்கு இன்னும் துயரமாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சோவியத் ஒன்றியத்தின் உளவுப் படையான கே.ஜி.பி.யில் விளாடிமிர் புதின் பணியாற்றியது குறிப்பிடத் தக்கது.
Comments