புதிதாக பரவும் ஒமிக்ரான் வைரஸை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வு முடிவுகள், இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என ரஷ்யா அறிவிப்பு.!

0 2007

புதிதாக பரவும் ஒமிக்ரான் வைரஸை, கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வு முடிவுகள், இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இத்தகவலை மாஸ்கோவில் உள்ள அந்நாட்டின் தேசிய நோய் பரவல் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சுமார் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 16 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 67 லட்சம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், 74 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments