நிரபராதி என விடுவிக்கப்பட்டவருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம் - அலகாபாத் உயர் நீதிமன்றம்
குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்குவதை நிறுத்தி வைக்க கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014 ல் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் அவரை நிரபராதி என 2020 ல் விடுதலை செய்தது. ஆனால் அதை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம் நிபராதி என்ற தீர்ப்பு நீடிக்கும் வரை சம்பந்தப்பட்ட நபரை குற்றவாளியாக கருதக்கூடாது என்று தெரிவித்தனர்
Comments