புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஆண்டுக்கு 4 தகுதி நாள்களை ஏற்படுத்த திட்டம்
புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஆண்டுக்கு 4 தகுதி நாள்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நான்கு தேதிகளை தகுதி நாள்களாக நிர்ணயிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 14(பி) பிரிவில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மக்களவைத் தேர்தல், பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பொதுவான வாக்காளர் பட்டியலைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். மேலும், தகுதியான கூடுதல் இளைஞர்கள் வாக்காளர் ஆவதையும் உறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments