தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ராமபோசா கேப் டவுன் நகரில் முன்னாள் துணை அதிபர் எஃப்.டபிள்யூ டி கிளர்க்கின் நினைவாக பங்கேற்ற பிறகு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்துக்கான அனைத்துப் பொறுப்புகளையும் துணை அதிபர் டேவிட் மபுசாவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அது ஒமிக்ரான் வகை தொற்றா என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மறைந்த முன்னாள் துணை அதிபர் FW de Klerk ற்கு கேப் டவுனில் நடந்த அரசு நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அதிபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள அதிபரை ராணுவ மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, ஒமிக்ரான் வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று தீடீரென அதிகரித்துள்ளது, 17 ஆயிரமாக இருந்த தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் சுமார் 38 ஆயிரத்தை எட்டியது.
Comments