"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அபுதாபி கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் வெர்ஸ்ட்டாப்பன் வெற்றி
நடப்பு பார்முலா ஒன் கார்பந்தய தொடரின் இறுதிச் சுற்றான அபுதாபி கிராண்ட் பிரி போட்டியில் வெற்றிபெற்று பெல்ஜிய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
யாஸ் மெரினா ஓடுதளத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சக வீரர்களின் கார்களுடன் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் மற்றும் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஆகியோரின் கார்கள் சீறிப் பாய்ந்தன.
விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் இறுதி லேப்பில் லீவிஸ் ஹாமில்டன் பின்தங்கிய நிலையில், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தய தூரத்தை 1 மணி 30 நிமிடம் 17 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார்.
ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் ஹாமில்டனை விட 8 புள்ளிகள் முன்னிலை பெற்ற வெர்ஸ்டாப்பன் தனது முதல் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Comments