நாளை முதல் கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
கோவை குற்றாலம் அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்துள்ளதால் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
Comments