மறைந்த நடிகர் திலீப்குமாரின் 99 வது பிறந்தநாளை கொண்டாடிய பாலிவுட் திரையுலகினர்.!

0 3431

மறைந்த நடிகர் திலீப்குமாரின் 99 வது பிறந்தநாளை பாலிவுட் திரையுலகினர் கொண்டாடினர். டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த திலீப்குமார் கருப்பு வெள்ளை காலங்களில் சினிமாவின் முடிசூடா மன்னராக விளங்கினார்.

தமது 98 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்து கடந்த ஆண்டில் காலமானார். திலீப்குமார்தான் தம்மை நடிப்புத்துறைக்கு வர முன்னோடியாக இருந்ததாக நினைவு கூர்ந்தார் நடிகர் தர்மேந்திரா. தினமும் கண்ணாடி முன்பு நின்று திலீப்குமார் போல நடித்து பார்த்ததாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில்  இயக்குனர் சுபாஷ் காய் , திலீப்குமாரின் மனைவி நடிகை சாயிரா பானு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.  புதிய பெண் இயக்குனருக்கு நிதியுதவி வழங்கினார் சாயிரா பானு.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments