ஆசியாவில் 4வது சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்குகிறது: ஆஸ்திரேலிய நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்
ஆசியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தளமாகக் கொண்ட லோவி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், கொரோனா பாதிப்புக்குப் பின் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்தியா மற்றும் சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள்தொகை மற்றும் நிதி அமைப்பில் உள்ள பலவீனங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டதால், சீனாவின் அதிகார அளவு வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பொருளாதாரம், ராணுவம் மற்றும் கலாச்சார செல்வாக்கினால் இந்தியா 4வது இடத்தைத் தக்கவைத்துள்ளதாக லோவி நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments