வடக்கு ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் தத்தளிப்பு!
வடக்கு ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் நீரில் மூழ்கின.
டுடெல்லா நகரில் உள்ள எப்ரோ நதியின் கரை உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. வீட்டின் கூரைகள் மட்டும் வெளியே தெரியும் அளவுக்கு மழை நீர் சூழ்ந்து காட்சியளிக்கின்றன.
ஒருபுறம் நீரை வெளியேற்றும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு புறம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உணவு பொருட்கள் வழங்கும் பணியில் ராணுவ வீரர்கள் 292 துருப்புகளாக பிரிந்து பணியாற்றி வருகின்றனர். ஆற்றங்கரையில் மணல் கொட்டி கரையை வலுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஹெலிகாப்டரில் இருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
Comments