அரசுக்கு சுமார் 1.38 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக நெடுஞ்சாலை ஆணைய துணை பொதுமேலாளர் மீது வழக்கு
லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்தப் பணிகளை வழங்கியதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணை பொதுமேலாளர் முத்துடையார் உள்ளிட்ட 4 பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரை - ராமேஸ்வரம் சாலை மற்றும் தஞ்சை - புதுக்கோட்டை சாலை பணிகளுக்காக, ஒப்பந்ததாரர்களிடம் முறையான ஆவணங்களை பெறாமல் ஒப்புதல் வழங்கியதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், லஞ்சம் கொடுத்து ஒப்பந்தத்தை பெற்றதாக, தெலங்கானாவை சேர்ந்த KNR கன்ஸ்ட்ரக்சன், சென்னையை சேர்ந்த காயத்ரி SPL ஆகிய இரு நிறுவனங்கள் மீதும், சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments