குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் செல்போன் பறிமுதல்

0 86624
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் செல்போன் பறிமுதல்

குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதனை கோயம்புத்தூர் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், விபத்து ஏற்பட்ட இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள், மின் கம்பங்கள் ஏதேனும் இருந்ததா ? என மின் வாரியத்திடம் காவல்துறையினர் விளக்கம் கோரியதாகவும் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று நிலவிய வானிலை தொடர்பாக காவல்துறையினர், சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலதரப்பட்ட சாட்சிகளிடமும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, விபத்து தொடர்பாக விமானப்படை உயர் அதிகாரி தலைமையிலும் 4ஆவது நாளாக தீவிர விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments