ஸ்ரீகனகதாசரின் 534வது ஜெயந்திவிழா ; தலையில் தேங்காய் உடைத்து குல தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன்
ஓசூர் அருகே தேன்கனிகோட்டையில் ஸ்ரீகனகதாசரின் 534வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு குரும்பர் இனமக்கள், தலையில் தேங்காய்களை உடைத்து தங்களது குல தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வீரபத்ரசுவாமி, லிங்கேஸ்வர சுவாமி உள்ளிட்ட குலதெய்வங்களின் பல்லக்குகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சிறப்பு பூஜைகளுக்குப் பின், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய முறைப்படி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
Comments