சென்னையில் ரூ.335 கோடி மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி திட்டம்

0 14170

சென்னையில் மொத்தம் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கணேசபுரம், ஓட்டேரி மற்றும் தியாகராய நகர் உஸ்மான் சாலையில் புதிய மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  கணேசபுரத்தில் 142 கோடி ரூபாயிலும், தியாகராய நகரில் 131 கோடி ரூபாயிலும் மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேம்பால திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய பிறகு டெண்டர் விடப்படும் என சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments