இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதால் விபரீதம் ; லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

0 3226
இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்

சென்னை கொடுங்கையூரில் பின்னால் டாரஸ் வகை குப்பை லாரி வருவதை அறியாமல், ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற பைக், அந்த ஆட்டோ மீதே உரசி நிலைத்தடுமாறியதில், பின்னால் அமர்ந்திருந்த பெண் கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண் முன்னே பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரனோடை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமாரும் அவரது மனைவி பரிமளாவும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். எருக்கஞ்சேரி ஐயப்பா திரையரங்கம் அருகே சென்ற போது, பின்னால் டாரஸ் வகை குப்பை லாரி வருவதை அறியாமல், முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றார்.

லாரி நெருக்கமாக வந்துவிட்ட நிலையில், ஆட்டோ மீது பைக் உரசியதால், நிலைத்தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த பரிமளா கீழே விழுந்து லாரியின் முன்சக்கரத்தில் சிக்கி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments