ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நல்லடக்கம்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் சாய் தேஜாவின் உடல் அவரது சொந்த ஊரில், முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் தனிப்பாதுகாவலரான சாய் தேஜாவின் உடல், டெல்லியில் இருந்து வான்வழியாக பெங்களூரு கொண்டு வரப்பட்டு, சாலை மார்க்கமாக ஆந்திர மாநிலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சாய் தேஜாவின் உடலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை அடுத்து, சாய் தேஜாவின் உடலுக்கு அவரது சொந்த கிராமமான ரேகடாவில் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ராணுவத்தினரின் 21 துப்பாக்கி குண்டுகளும் காவல்துறையினரின் 18 துப்பாக்கிக் குண்டுகளும் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Comments