2 மணி நேரத்தில் ஒமைக்ரான் தொற்றை கண்டுபிடிக்கும் கருவி ; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் வடிவமைப்பு
2 மணி நேரத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா-வை கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட அடுத்த நாளே, அசாம் மாநிலம் டிப்ருகரில் உள்ள ICMR ஆய்வகத்தில் ஒமைக்ரானை அதிவிரைவாக கண்டறியும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கினர்.
அதன் மூலம் 1000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சாம்பிள்களை பரிசோதித்ததில் ஒமைக்ரான் தொற்றை இரண்டே மணி நேரத்தில் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தற்போது கொல்கட்டாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கருவி அடுத்த வாரம் முதல் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை வசதி உள்ள ஆய்வகங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தலால், விமான நிலையங்களில் பரிசோதனை முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு இது நிவாரணமாக அமைந்துள்ளது.
Comments