பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணை காளை மாடு முட்டி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 3156
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணை காளை மாடு முட்டி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணை, காளை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்புவனம் பகுதியில் காளைமாடுகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக சாலைகளில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதும், அவ்வப்போது ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்வதும் வழக்கம் எனக் கூறப்படுகிறது.

நேற்று மதியம் இரு மாடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதில், ஒரு மாடு வேகமாக ஓடிச் சென்ற நிலையில், வழியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை முட்டி தள்ளி தூக்கிவீசியது.

இதேபோன்று, சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட இரு மாடுகள், கடைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை நாசம் செய்ததோடு, மக்களையும் அச்சுறுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பாசாங்கரை கோவிலுக்கு சொந்தமான இந்த மாடுகளை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments